சில நாட்களுக்கு முன் AIDS விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது நியாபகம் இருக்கலாம். அன்று பல வானொலி நிலையங்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றை ஒலிபரப்பு செய்தன. சாதாரணமாக வானொலியை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது வந்த ஒரு நிகழ்ச்சி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது என்னை மட்டுமல்ல, நிகழ்ச்சியை கேட்கும் ஒவ்வொரு தமிழனையும் அதிர்ச்சி ஆக்கியிருக்கும்.
தமிழ் மீது அளவற்ற அன்புகொண்ட[:-)] ஒரு வானொலி RJ(Radio Jockey) அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி என்னவெனில், "AWARENESS" என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தையை தொலைபேசியில் அவருக்கு அழைத்துத் தெரிவிக்க வேண்டும். இதுதான் போட்டி. சரியான பதில் சொல்பவர்களுக்கு பரிசுகளும் அறிவித்திருந்தனர். தலையில் அடித்து அமர்ந்திருந்த எனக்கு இன்னொரு அதிர்ச்சி.
ஒரு நேயர் அவரைத் தொடர்பு கொண்டார். இந்த கேள்வியை திரும்பக் கேட்ட உடன், அந்த நேயர் நீண்ட நேரம் யோசித்து மிக அழகாக "விழிப்புணர்வு" என்று பதில் சொல்லியும்விட்டார். (தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருப்பார் போலும்). சிறிது நாட்களில் "MOTHER" என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை என்ன என்றுகூட நிகழ்ச்சிகள் வரலாம். யார் கண்டது??
தமிழ் இனி மெல்லச் சாகும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.
Tuesday, December 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment