"டேய் எந்திரி டா, மணி ஏழு ஆகுது இன்னும் என்ன தூக்கம். காலேஜ்க்கு போற மாறி நினைப்பு இல்லையா?" கையில் காபி தம்ளருடன் அம்மா. "ஏழு மணி வரைக்கும் தூங்கறான் பாரு. இவனெல்லாம் எங்க உருப்படபோறானோ தெரியல" என்ற அப்பாவின் புலம்பல். இதுதான் தினம்தினம் நான் வீட்டில் கேட்கும் காலை வணக்கம். "பையன புடிச்சு திட்டறதே உங்களுக்கு வேலையா போச்சு" என்று அம்மா வின் பதில், கொண்டுவந்த காபியைப் போலவே இனித்தது. "ஆமா! உன் அழகு மகன மடியில போட்டு கொஞ்சு!" என்று அப்பா சொல்ல, "ஏன் என் பையன நான் கொஞ்சாம வேறயாரு வந்து கொஞ்சுவாங்க?" என்று சொல்லிக்கொண்டே மடியில் படுக்கவைத்து தலையை வருடிக்கொடுக்கும் சுகம். அப்பப்பா. எத்தனை பொன் தேடிக் கொண்டுவந்தாலும் கிடைக்குமா?
யாரோ உதைப்பது போலிருந்ததால் தூக்கம் கலைந்தது. விழித்துப் பார்த்தேன். என் நண்பனின் கால் என் மேல் கிடந்தது. தடவித் தடவி கைப்பேசியை எடுத்து மணி பார்த்தேன். நேரம் சரியாக 8:11. "அய்யயோ, லேட் ஆயிடிச்சு டா. சீக்கிரம் எந்திரி. நேத்தே லேட்டா வந்ததுக்கு TL ஒருமாதிரியா பார்த்தான். இன்னைக்கும் லேட்டா போனா அவ்ளோதான், கண்டிப்பா PM கிட்ட போட்டு குடுத்திருவான்". அவசர அவசரமாய் போய் குளிக்கும்போதுதான் நியாபகத்திற்கு வந்தது, அம்மாவின் மடியும் அப்பாவின் கண்டிப்பும் கனவாய் வந்ததென்று...

No comments:
Post a Comment