பனிரெண்டு மாதக் காத்திருப்பும், பதினெட்டு மாத ஏக்கமுமின்றோடு முடியவேண்டுமென்று முடிவெடுத்தேன்;
இதோ புறப்பட்டுவிட்டேன் கையில் காகிதமும் மனதில் காதலுமாய்.
இரண்டு கட்டு காகிதம், ஒரு மை புட்டியின் தியாகம் இறுதியில் அழகிய காதல் கடிதமாக வடிவெடுத்தது.
இதோ என் தூதுவன் தயாராகிவிட்டான். இவன் கொண்டு செல்வது என் காதல் மட்டுமல்ல, என் காத்திருப்புக் காலங்களின் கண்ணீர்த் துளிகளும்தான்.
இது ஒரு அழகிய காலைப் பொழுது. மூன்று வருடங்களாய் அவளை நான் நின்று ரசிக்கும் அதே கல்லூரி வாசல்.
என் வழக்கமான அறுபது கிலோ எடை இன்று நூற்றுக்கு மேல் சென்றுவிட்டதாய் உணர்கிறேன்.
காரணங்கள் இவைதான்: சட்டைப் பையில் கனக்கும் கடிதம், அதை விட முதிர்ந்துவிட்ட என் காதல்.
அதோ வருகிறாள் என் தேவதை. வழக்கம்போல் தோழிகள் புடைசூழ.
கால் கொலுசு ஓசையும் மல்லிகை மணமும் ஓட்டப் போட்டி நடத்திவர, அதனிடையே அவளும், இதோ வந்துவிட்டாள்.
இன்றும் அதே புன்முறுவல் எப்பொழுதும்போல, ஆனால் என்னைப் பார்த்து அல்ல.
கையில் கடிதம் மனதில் காதல்; இன்று கண்டிப்பாக கொடுத்து விடுவது என்ற மன திடம்.
இன்றாவது வெற்றிகொள்வேனா?பார்க்கலாம்.
இதோ நெருங்கிவிட்டாள்.
நான் இப்பொழுது 'நீ'ராயுதபானியாய் நின்றுகொண்டிருக்கிறேன்உடல் முழுதும் வழிந்தோடும் உப்புக் காவிரியால்.
நேற்று அவளிடம் பெற்ற புத்தகத்தில் வைத்துக் கொடுத்து விடலாமென்று என் உள்மனம் உரைத்தது,சரியென்று சொல்லி அழைத்தேன் அவளை.
"என்னவளே" என்று ஆரம்பித்த உதடுகள், "என்னங்க" என்று முடிந்தது.
அவள் என்னிடம் வந்தாள்.
'உங்கள் புத்தகம் இதோ' ,என்றேன்
நான் சொல்லவேண்டிய நன்றியை அவள் சொல்லிச் சென்றாள்.
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், நீ வென்றுவிட்டாய் என்று உள் மனம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.
இரண்டு ஆண்டுக் காத்திருப்புப் பயணம் இன்று ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது ; நாளை என்ன பதில் வருமோ என்ற தவிப்பு தொடங்கியது. வெற்றிக் களிப்பில் வழிந்தோடிய வியர்வையை துடைக்க கைக்குட்டை தேடினேன்,சிக்கியதோ ஒரு காகிதம், என்னவென்று பார்த்தேன்.'அன்புள்ள' என்று ஆரம்பித்து 'காதலுடன் காத்திருக்கும்' என் கையெழுத்து என்னை எக்காளமிட்டது. அந்தப் புத்தகத்தில் என்னதான் வைத்துக் கொடுத்தேன்?
"உங்கள் கைக்குட்டை" என்று கொண்டுவந்து கொடுத்துச் சென்றாள் அவள்.
சிரித்துக் கொண்டே பெற்றுக் கொண்டேன்.வேறென்ன செய்யமுடியும் என்னால்...

No comments:
Post a Comment